அவமானத்தில் அனைவரும் தலையை தொங்கவிட வேண்டும்: விஜய் நாயகி ஆவேசம்


Send us your feedback to audioarticles@vaarta.com


உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என புகழ் பெற்றிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா இதுகுறித்து தனது கருத்தை ஆவேசமாக கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அவமானம் அடைந்து நாம் ஒவ்வொருவரும் தலையைக் கீழே தொங்கவிட வேண்டும்.
பெண்களை பாதுகாப்பதில் நாம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு பாலியல் பலாத்காரத்தையும் ஒரு செய்தியாக கடந்து போகாமல், அவர்கள் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்று அவ்வாறு ஆவேசமாக கூறியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments