நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடியால் பாதிப்பு வராது. கே.பாக்யராஜ்

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

கோலிவுட் திரையுலகமே திருட்டு விசிடியால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வருகின்றனர். திருட்டு விசிடியை ஒழிக்க கடும் நடவடிக்கையை எடுக்க போவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் விஷாலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான கே.பாக்யராஜ் திரைப்பட விழா ஒன்றில் 'திருட்டு விசிடியால் சினிமாவுக்கு 10 சதவீதம் தான் பாதிப்பு என்றும், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எடுத்தால் நிச்சயமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள்' என்றும் கூறியுள்ளார்.

புதுமுகங்கள் நடித்துள்ள 'ரோஜா மாளிகை' என்னும் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.பாக்யராஜ் கூறியதாவது: சமீபத்தில் வெளியான 'மாநகரம்', '8 தோட்டாக்கள்' போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், பெரிய நடிகர்கள் இல்லை என்றாலும் பேசப்படுகிறது. காரணம் நல்ல கதை மற்றும் தயாரிப்பு முறை என்பதால் தான். பாகிஸ்தான்காரன் எப்போதாவதுதான் குண்டுபோடுவான். அதனால் ஏற்படும் பாதிப்பு மிகக்குறைவுதான். ஆனால் லோக்கல் அரசியல்வாதிகளால்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதுபோல் திருட்டு விசிடி பாதிப்பை விட அதிக பாதிப்பு மற்ற விஷயங்களில்தான் இருக்கின்றது.

மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை தரவேண்டும். புதிய நடிகர்களின் படங்களுக்கு மாலைக்காட்சியை தியேட்டர்கள் கொடுக்க வேண்டும். பெரிய நடிகர்கள் படம் என்றால் காலையில் கூட கூட்டம் வரும், ஆனால் புதிய நடிகர் படங்களை காலை காட்சியில் வெளியிட்டால் கூட்டம் வராது. அதனால் அதற்கேற்றபடி தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறினார்.

More News

விஷாலின் ஒரு ரூபாய் திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்காது. தங்கர்பச்சான்

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதும், முதல் அறிவிப்பாக விவசாயிகளுக்கு உதவும் ஒரு ரூபாய் திட்டம் ஒன்றை அறிவித்தார்...

தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறிக்க விடப்படும் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகிய 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஒரு வருடம் நிறைவு பெறுவதை அடுத்து சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 'தெறி' திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சி.வி.குமார் இயக்கிய 'மாயவன்' பாடல்கள் ரிலீஸ் தேதி

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் 'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூதுகவ்வும்', 'முண்டாசுப்பட்டி' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்...

நாளை முதல் மீண்டும் களத்தில் இறங்கும் சச்சின் - ரஹ்மான்

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் நடித்த அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது...

விஷ்ணு-ரெஜினா படத்தின் வித்தியாசமான டைட்டில்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். கடந்த ஆண்டு விஷ்ணு நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' மற்றும் 'மாவீரன் கிட்டு' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.