சினிமாவுக்கு பதில் நிஜவாழ்க்கையில் நடக்கின்றது: நடிகை டாப்ஸி

  • IndiaGlitz, [Monday,July 13 2020]

குஜராத் மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் மகனின் நண்பர்களை பெண் போலீஸ் ஒருவர் கைது செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை டாப்சி ’நாங்கள் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டோம். ஆனால் அதற்கு பதிலாக நிஜ வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடந்து வருகிறது’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் ஊர் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. அப்போது ரோந்து சென்ற பெண் காவலர் சுனிதா, ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித்திரிந்த அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளார்

இதுகுறித்து தகவலறிந்த பிரகாஷ் கனானி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெண் காவலர் சுனிதா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இடமாற்றத்தை ஏற்காத சுனிதா விடுப்பில் சென்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த சம்பவம் குறித்து நடிகை டாப்சி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த போது ’நாங்கள் கடந்த சில மாதங்களாக திரைப்படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டோம். ஆனால் அதற்கு இணையாக சில நிஜ சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்று கூறியுள்ளார். பெண் காவலர் சுனிதாவின் வீரம் குறித்து நடிகை டாப்ஸி கூறியுள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

More News

யார் சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? சுவாரசியம் நிறைந்த கருத்துக் கணிப்பு!!!

ஐபில் கிரிக்கெட் போட்டி காலவரையறையின்றி ஒத்து வைக்கப் பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களைத்

25 வருடங்களுக்கு முன் உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம்: தந்தைக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் நடிகை

25 வருடங்களுக்கு முன் உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார் 

அஜித்தின் 'விஸ்வாசம்' படம் குறித்து மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பிய பாடலாசிரியர் அருண்பாரதி

அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்'.ரூபாய் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 160 முதல் 200 கோடி

சினிமாவுக்கு வந்ததால் நான் இழந்தது இதுதான்: விஜய்சேதுபதி பேட்டி

சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ் , பணம் உள்பட பலவற்றை நான் பெற்றிருந்தாலும் ஒன்றை மட்டும் இழந்து விட்டேன் என்று விஜய் சேதுபதி தனது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

மதுரை ராமு தாத்தாவுக்கு புகழாராம் சூட்டிய விவேக்!

மதுரையில் ராமு தாத்தா ஹோட்டல் என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். மிக குறைந்த விலையில் தரமான உணவை அந்த பகுதி மக்களுக்கு அவர் அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது