மீண்டு வந்த மெர்சல் நிறுவனம்: ரசிகர்கள் ஆதரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்த போதிலும் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகமான காரணத்தால் அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக இந்நிறுவனம் பெரும் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து மீண்டும் தங்களது டுவிட்டர் பக்கத்தை மீட்க முயற்சிகள் நடைபெற்றதாகவும் தற்போது அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் என்ற பெயரிலேயே டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது விரைவில் வெரிஃபிகேஷனும் பெற்று விடுவோம் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து அந்நிறுவனத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.
டுவிட்டர் பக்கத்தில் இருந்து மீண்டது போல் இந்நிறுவனம் தனது பொருளாதார சிக்கலில் இருந்தும் மிக விரைவில் மீண்டு, மீண்டும் பல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
We have resolved all issues with our account. We will be applying for our verification again. We wish you all well.
— Thenandal Films (@ThenandalFilms) January 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout