'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை: சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என வில்லேஜ் குக்கிங் சேனல் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நடித்திருப்பார்கள் என்பதும் அந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த வில்லேஜ் குக்கிங் சேனலின் சுப்பிரமணியன் அவர்கள் ’விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக நாங்கள் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் விளம்பரங்களுக்காக எந்த தொகையும் பெறக்கூடாது என நாங்கள் சேனல் தொடங்கும்போதே முடிவு செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த முடிவை தற்போது வரை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்றும் பிரபல சாக்லேட் நிறுவனம் ஒன்று 10 வினாடி விளம்பரத்திற்கு 4.5 லட்சம் தருகிறோம் என்று சொன்னதை கூட நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

எனது அடுத்த படத்தின் கேரக்டர் இதுதான்.. நயன்தாரா வெளியிட்ட சூப்பர் புகைப்படம்..!

நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம்  சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படம்  ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின்

அர்ச்சனாவை மட்டம் தட்டும் வேலை நடக்கிறதா? 2 புரமோவிலும் நெகட்டிவ் காட்சிகள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்ன கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அர்ச்சனாவை மட்டம் தட்டும் வேலை நடப்பதாக பார்வையாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.

'காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய படம் ஒத்திவைப்பா? என்ன காரணம்?

கவின் நடித்த 'ஸ்டார்' மற்றும் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 'ஸ்டார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

விஷ்ணுவை லேசா சுரண்டினா போதும்.. கடைசி வாரத்திலும் வம்புக்கிழுக்கும் மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட்டால் விஷ்ணு உள்பட ஐந்து போட்டியாளர்கள்

தமிழ்நாட்டில் பிரபல சோப் கம்பெனியின் தொழிற்சாலை.. 50% பெண்களுக்கு 5% மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை..!

இந்திய அளவில் சோப்பு விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கோத்ரெஜ் நிறுவனம் தனது புதிய சோப் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க இருப்பதாகவும் இந்த தொழிற்சாலையில் 50 சதவீதம் பெண்களுக்கும் 5