கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிச்சிட்டோம்!!! நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
நெதர்லாந்தின் university of Utrecht பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறுகிய காலத்தில் நடத்தப் பட்ட சோதனை என்றும் தெரிவித்து இருக்கிறது.
நெதர்லாந்தின் Utrecht மற்றும் Rotterdam பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸ்க்கு ஒரு நோய் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு பயனுள்ள சிகிச்சை மருந்தாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பு மருந்து 47D 11 என அழைக்கப் படுகிறது. இது மனித சுவாச மண்டலத்தில் உள்ள கொரோனா வைரஸை பரப்புவதற்கு காரணியாக இருக்கும் Spike Protein செல்களைத் தாக்கி ஒரு Molecule Antibiotic ஆகச் செயல்படும் எனத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
மனித சுவாசக் கருவிகளின் வழியாகவே இந்த Covid – 19 வைரஸ் உடலுக்குள் பரவுகிறது. சுவாசத்தின் வழியாகப் பரவும் வைரஸ் கிருமியை தடுப்பதற்கு உடலில் உள்ள Spike Protein ஐ நிலைக்குலைய செய்வதே சிறந்த வழியாகும். Spike Protein ஐ Covid – 19 உடன் இணையாமல் பார்த்துக் கொள்ளும் போது மற்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். இந்த ஆய்வின் சோதனை முடிவுகள் BioRXiv ஆய்விதழில் வெளியிடப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த ஆய்வானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்தக் கட்டமாக பல சோதனைகள் மேற்கொள்ளப் படும் என்றும் தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நெதர்லாந்து பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஏற்கனவே கொரோனா வைரஸ் குடும்பத்தின் பல வைரஸ் தாக்குதல்களை குறித்து ஆய்வு செய்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. கொரோனா குடும்பத்தில் Covid – 19 ஏழாவது வகை வைரஸ் என்றும் இந்த ஆய்வுக் குழு தெரிவித்து இருக்கிறது.
இதுவரை கொரோனா வைரஸ் குடும்பத்தின் மற்ற வைரஸ்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில் Covid – 19 உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆய்வின் முதற்கட்ட சோதனைகள் எலியை வைத்து பரிசோதனை செய்யப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்துகளோ அல்லது நிவாரண மருந்துகளோ கண்டுபிடிக்கப் படாத நிலையில் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு மக்களிடம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments