உலகிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்!!! குதூகலிக்கும் நாடு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15 இல் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இதற்கு வாய்ப்பில்லை என்று தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா தடுப்பூசிக்கு கிளினிக்கல் சோதனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ஜுலை 7 ஆம் தேதி தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதுகுறித்த கருத்து வெளியிட்ட சில விஞ்ஞானிகள் கிளினிக்கல் சோதனையில் 12 விதிமுறைகள் இருக்கின்றன. அதில் 7 விதிமுறைகளை சோதனை செய்து பார்க்க மட்டுமே ஒப்புதல் கிடைத்து இருக்கிறது எனவும் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியாவில் நிலைமை இப்படியிருக்கும்போது ஒரு நாடு கொரோனா தடுப்பூசியில் கிளினிக்கல் சோதனையை முழுவதுமாக முடித்து விட்டோம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கிடைத்து விட்டது என மகிழ்ச்சியாக அறிக்கை வெளியிட்டு வருகிறது.
ரஷ்யாவில் உள்ள செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாடிம் டாரா சோவ் உலகிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து உள்ளோம். இந்தத் தடுப்பு மருந்து கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டது. அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளார். செச்சனோவ் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உருவாக்கப் பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து கிளினிக்கல் சோதனைக்கு முந்தைய நிலை, கிளினிக்கல் பரிசோதனை அனைத்தும் முடித்துக் கொண்டு வெற்றிகரமான முடிவினை வெளிப்படுத்தியதாகவும் அதன் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா தடுப்பூசியின் பெரும்பாலான சோதனைகள் முடிக்கப் பட்டுள்ளதால் உலகிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து உள்ளது என்று பெருமிதத்துடன் செய்திகள் சுட்டிக்காட்டி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தக் கட்ட ஆய்வுகள் தயாரிப்புகள் போன்ற விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments