சிம்புவை கெட்டவனாக்கும் எண்ணமில்லை. டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் எது என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை
இருப்பினும் சிம்பு நடிப்பில் உருவாகி பாதியில் நின்ற 'கெட்டவன்', 'கான்', 'வேட்டை மன்னன்' ஆகிய படங்களில் ஒன்று மீண்டும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவான 'கெட்டவன்' மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய டி.ராஜேந்தர், 'சிம்பு இயக்கத்தில், 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம், 'கெட்டவன்'. இந்தப் படத்தின் உரிமை என்னிடம்தான் உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் நான்தான். ஆனால், தற்போது சிம்புவும் நானும் அந்த புராஜெக்ட்டை கையில் எடுக்கவில்லை. இதுபற்றி நாங்கள் எதுவும் முடிவு செய்யவில்லை. சிம்பு, வேறு சில படங்களின் டிஸ்கஷனில் இருக்கிறார். 'கெட்டவன்' படத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பேசவில்லை' என்று கூறினார்.