சிவகார்த்திகேயன் வழக்கு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது: நீதிமன்றத்தில் சொன்னது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் வழக்கு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என வருமான வரித்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ’மிஸ்டர் லோக்கல்’ என்ற திரைப்படத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில் இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா, ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வினியோகஸ்தர் உடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் அவர் பல உண்மைகளை மறைத்து உள்ளதாகவும் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் எதிர் மனுதாரரான வருமான வரித்துறையும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் வருமான வரித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ’சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையில் உள்ள பிரச்சனை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அது அவர்கள் இருவரின் பிரச்சனை என்றும், இந்த பிரச்சனைக்கும் வருமான வரித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் எனவே சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் வருமான வரித் துறையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout