பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது என்று ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மேற்குவங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அப்போது பேசிய அவர், 'குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமையை வழங்கும் சட்டம்; பறிப்பதற்கான சட்டம் அல்ல. இந்த சட்டத்தை புரிந்துகொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ராமகிருஷ்ண மடத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளை பிரதமர் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று அந்த மடத்தின் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ராமகிருஷ்ண மடத்தின் பொதுச்செயலாளரான சுவாமி சுவீரானந்தா, 'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'" என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments