நாங்கள் இருவருமே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம்: சூர்யா சந்திப்பு குறித்து கிரிக்கெட் பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா சந்திப்பு குறித்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியபோது, ‘முதல் சந்திப்பின் போது நாங்கள் இருவரும் கூச்ச சுபாவத்துடன் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் அவரது சமூக வலைதள பதிவுகள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் மும்பையில் சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு சச்சின் பதில் அளித்துள்ளார்.
சூர்யா உடனான சந்திப்பு குறித்து கூறுங்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சச்சின் தெண்டுல்கர், ‘ நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தது, ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் போகப்போக இருவரும் நன்றாக பேசிக் கொண்டோம், இது ஒரு நல்ல உரையாடல் தருணமாக அமைந்தது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
We both were very shy initially and didn't want to disturb each other but ended up having a good chat. #MutualAdmiration @Suriya_offl https://t.co/Q7tNqoahNe
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com