ஹர்பஜன்சிங் திடீர் விலகல் குறித்து சிஎஸ்கே சி.இ.ஓவின் பரபரப்பு டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக இருக்கும் போல் தெரிகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் தனது குடும்பத்தில் நடந்த அசம்பாவிதம் காரணமாக சுரேஷ் ரெய்னாவும் நாடு திரும்பியுள்ளார். அவர் மீண்டும் துபாய் சென்று ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்த ஓராண்டு மட்டும் தான் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகுவதாகவும் தன்னுடைய முடிவை அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஹர்பஜன்சிங் அவர்கள் எங்களிடம் முறைப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு மட்டும் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருடைய முடிவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். மேலும் அவருக்கு அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இந்த சோதனையான காலத்தில் அணி நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
Harbhajan Singh informed us he won’t be available due to personal reasons. Team Chennai Super Kings is supportive of his decision and stands by him and his family during these testing times.
— Chennai Super Kings (@ChennaiIPL) September 4, 2020
KS Viswanathan
CEO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments