close
Choose your channels

திமுக-காங். கூட்டணியில் விஜய்யை இணைத்துக்கொள்ள தயார்: நடிகர் - காங்கிரஸ் எம்பி பேட்டி..!

Tuesday, June 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் இன்னும் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, அரசியல் கட்சியும் அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை, ஆனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி எம்பியும், நடிகருமான விஜய் வசந்த் பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்த போது ’தற்போது தான் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து அரசியலுக்கு வருவதற்கு தயார் படுத்தி வருகிறார். அவருக்கு ஏற்கனவே அரசியல் ஆசை இருந்தாலும் தற்போது வெளிப்படையாக அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும், ஆனால் அதே நேரத்தில் அவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது ’வாக்குக்கு பணம் கொடுக்கக் கூடாது என்றும் ஊழல் இல்லாத அரசு வேண்டும் என்று எண்ணம் உடையவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்றும் விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment