ரஜினி, கமல் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா? நாங்களும் தயார்: சுஹாசினி

  • IndiaGlitz, [Wednesday,October 04 2017]

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகினர்களின் ஆட்சி தான் நடந்து வருகிறது. அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய அனைவருமே திரையுலகில் சம்பந்தப்பட்டவர்கள்தான். இன்னும் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் அரசியலில் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சுஹாசினி மக்கள் விரும்பினால் அரசியலில் இறங்க தயார் என்று கூறியுள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுஹாசினி இதுகுறித்து கூறியபோது, 'ஜெயலலிதா ஒரு பெரிய பொறுப்பை கொடுத்துவிட்டு அவரது கீழ் குடிமக்களாக இருந்துவிட்டு திரையுலகில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வரவில்லையா? என்று கேட்பதே ஒரு மோசமான கேள்வியாக கருதுகிறேன்.

ஏன் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டுமா? ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும் கூட அரசியலுக்கு வரலாம். அதெல்லாம் உங்கள் கைகளில்தான் உள்ளது. ஜெயலலிதாவை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்தது போல் ராதிகாவுக்க்கும், ரேவதிக்கும் சுஹாசினிக்கும் அந்த பொறுப்பை கொடுங்கள், நாங்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதற்கு தயாராகத்தான் உள்ளோம்

More News

ரசிகர்களுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை: அரசியல் அறிவிப்பா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆவேசமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்து வருகின்றார்.

சினிமாவை பின்னுக்கு தள்ளுமா வெப்சீரிஸ்: அக்சராஹாசன்

தொழில்நுட்ப பரிணாமத்தில் புதிய தொழில்நுட்பம் பழைய தொழில்நுட்பத்தை வீழ்த்தி வருவது சகஜமே. இந்த நிலையில் சினிமாவுக்கு இணையாக தற்போது தொலைக்காட்சி சீரியல்கள் புகழ் பெற்று வருகின்றன.

விஜய்யின் மெர்சலுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆறுச்சாமியின் அசத்தலான ஸ்டில்: விறுவிறுப்பான படப்பிடிப்பில் 'சாமி 2'

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அக்டோபர் 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால் அதிரடி

மத்திய அரசு கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசும் தற்போது கேளிக்கை வரியை உறுதி செய்துள்ளதால்