இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் உதவியிருக்கின்றோம்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சியினர் உதவி செய்துள்ளனர் என்று கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகநாயகன் கமலஹாசன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் அருகிலுள்ள தேர்தல் கமிஷன் நடத்தும் முகாமுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இது குறித்து அவர் தற்போது டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். எம்மவரின் இச்செயல், நீண்ட பயணத்தின் முன்னோட்டம். வரவிருக்கும் வெற்றிகளின் வெள்ளோட்டம். நம் அன்பு இளைஞர் படையின் வீரர்களை ஆரத் தழுவுகிறேன்’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) November 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments