இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் உதவியிருக்கின்றோம்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Sunday,November 22 2020]

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சியினர் உதவி செய்துள்ளனர் என்று கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகநாயகன் கமலஹாசன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் அருகிலுள்ள தேர்தல் கமிஷன் நடத்தும் முகாமுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து அவர் தற்போது டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். எம்மவரின் இச்செயல், நீண்ட பயணத்தின் முன்னோட்டம். வரவிருக்கும் வெற்றிகளின் வெள்ளோட்டம். நம் அன்பு இளைஞர் படையின் வீரர்களை ஆரத் தழுவுகிறேன்’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

More News

நடிகர் ஜெய்யின் 'பிரேக்கிங் நியூஸ்' இணையத்தில் வைரல்!

'எங்கேயும் எப்போதும்' 'ராஜா ராணி' 'கலகலப்பு 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான இவர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகிறது. இதனையடுத்து 50 நாளில் உங்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்க ஒவ்வொருவரும்

தலைவருடன் என்னுடைய இளவரசி: ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு

ஒரு பொய்யான தகவலால் ஒட்டுமொத்த மாநிலமும் முடக்கப்பட்ட சம்பவம்!!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணம் ஒன்றில் கடந்த புதன்கிழமை அன்று புதிதாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது.

அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா??? துணை முதல்வரின் பரபரப்பு விளக்கம்!!!

அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.