கொரோனா நேரத்தில் அலுவலகங்கள் அதிக ஆபத்தானவை ஏன்??? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

 

கொரோனா நேரத்தில் சமூக இடைவெளி, தனிநபர் பாதுகாப்பு, முகக்கவசம், சானிடைசர் போன்ற வார்த்தைகள் அதிகம் புழக்கத்திற்கு வந்து விட்டது. தடுப்பூசி குறித்த இறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் இந்த நடைமுறைகளை மட்டுமே மக்கள் அதிகம் நம்ப வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அலுவலகச் சூழலில் இருந்து பணிபுரிபவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகம் உள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

அலுவலகங்கச் சூழலில் பணிபுரிவது எப்படி கொரோனா தொற்றை அதிகம் பரவச் செய்கிறது என்பதைக் குறித்த ஒரு ஆராய்ச்சியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அதில் அலுவலகச் சூழல் பெரும்பாலும் ஏசி செட்டப்பில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். ஏசி அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்து செல்ல வாய்ப்பே இல்லை. அறையின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வெப்பநிலை நிலவ வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு ஏசி அறைக்குள் பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். அனால் இந்த அமைப்பு கொரோனா தொற்றை எளிதாகப் பரவச் செய்யும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது.

ஏசி அறைகளில் வெளிப்புற காற்று எளிதாக வந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அறைக்குள்ளேயே தொற்றுக்கு ஏதுவான திரவத்துளிகள் சுற்றித் திரிவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒருவேளை முகக்கவசம் இல்லாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ தொற்றுக்கான திரவத் துளிகள் காற்றில் கலந்து அறைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். அதிலும் முகக்கவசம் அணியாதவர்களை அது எளிதில் தொற்றிவிடும் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபர் முகக்கவசம் இன்றி பேசுதல், சிரித்தல் கூட மற்றவர்களுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் சரியாக காற்றோட்ட வசதி இல்லாத அலுவலகம் என்றால் வீட்டில் இருந்தே வேலை செய்வது நல்லது எனவும் அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

More News

மக்கள் நெஞ்சில் ஏகபோக வரவேற்பை பெற்ற தமிழக முதல்வர்!!! மீண்டும் தலைமையேற்க ஆதரவு!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து அதிமுகவை வழிநடத்தி வரும் ஒரு மாபெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்: சிம்புவின் இரங்கல் அறிக்கை

சிம்பு நடித்த 'மன்மதன்' உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் நேற்று இரவு தனது வீட்டில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்

கொரோனா தடுப்பூசிக்காக 50 ஆயிரம் சுறாக்கள் வேட்டை!!! கதிகலங்க வைக்கும் பின்னணி!!!

தடுப்பூசி என்பது குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

மனுச பயகூட சேர்ந்தாலே இப்படித்தா… பார்வையாளர்களைத் தரக்குறைவாகத் திட்டிய கிளிகள்!!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கிளிகள் பார்வையாளர்களைத் தரைகுறைவாகப் பேசிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகளின் செல்போனில் ஆபாச படங்களா?

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி