கொரோனா நேரத்தில் அலுவலகங்கள் அதிக ஆபத்தானவை ஏன்??? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் சமூக இடைவெளி, தனிநபர் பாதுகாப்பு, முகக்கவசம், சானிடைசர் போன்ற வார்த்தைகள் அதிகம் புழக்கத்திற்கு வந்து விட்டது. தடுப்பூசி குறித்த இறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் இந்த நடைமுறைகளை மட்டுமே மக்கள் அதிகம் நம்ப வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அலுவலகச் சூழலில் இருந்து பணிபுரிபவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகம் உள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.
அலுவலகங்கச் சூழலில் பணிபுரிவது எப்படி கொரோனா தொற்றை அதிகம் பரவச் செய்கிறது என்பதைக் குறித்த ஒரு ஆராய்ச்சியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அதில் அலுவலகச் சூழல் பெரும்பாலும் ஏசி செட்டப்பில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். ஏசி அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்து செல்ல வாய்ப்பே இல்லை. அறையின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வெப்பநிலை நிலவ வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு ஏசி அறைக்குள் பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். அனால் இந்த அமைப்பு கொரோனா தொற்றை எளிதாகப் பரவச் செய்யும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது.
ஏசி அறைகளில் வெளிப்புற காற்று எளிதாக வந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அறைக்குள்ளேயே தொற்றுக்கு ஏதுவான திரவத்துளிகள் சுற்றித் திரிவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒருவேளை முகக்கவசம் இல்லாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ தொற்றுக்கான திரவத் துளிகள் காற்றில் கலந்து அறைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். அதிலும் முகக்கவசம் அணியாதவர்களை அது எளிதில் தொற்றிவிடும் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபர் முகக்கவசம் இன்றி பேசுதல், சிரித்தல் கூட மற்றவர்களுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் சரியாக காற்றோட்ட வசதி இல்லாத அலுவலகம் என்றால் வீட்டில் இருந்தே வேலை செய்வது நல்லது எனவும் அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout