தமிழ் நடிகருக்கு இதுதான் முதல்: தளபதி விஜய்க்கு கிடைத்த பெருமை

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

கன்னியாகுமரியில் உள்ள மியூசியத்தில் விஜய்யின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. உலக, இந்திய, மற்றும் திரையுலக பிரமுகர்களின் பல மெழுகுச்சிலைகள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நடிகருக்கு மெழுகுச்சிலை முதல்முறையாக விஜய்க்குத்தான் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முக்கிய சுற்றுலா தளங்களில் கன்னியாகுமரி. சூரிய உதயம், சூரிய மறைவு, முக்கடல் சங்கமிப்பு என பல முக்கிய நிகழ்வுகள் இருக்கும் இந்த குமரியில் ரயில் நிலையம் அருகே மாயாபுரி- மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் அப்துல் கலாம், மன்மோகன்சிங், அமிதாப்பச்சன், அன்னை தெரஸா, ஒபாமா, மோகன்லால், ஷாருக்கான் உள்பட பல பிரபலங்களின் மெழுக்குச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய்யின் மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்களால் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தளபதி விஜய்யின் மெழுகு சிலையை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிப்பதோடு, அதனுடன் புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.

More News

யாராவது என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க: திருமண மண்டபத்தில் கெஞ்சிய தந்தை!

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென திருமணம் நின்றதால், அந்த பெண்ணின் தந்தை கல்யாண மண்டபத்தில்

'தர்பார்' படத்திற்காக அனிருத்தின் சரவெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில்

கமல்-ரஜினியுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமா? அமைச்சரின் அதிரடி பேட்டி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும்

கமல்-ரஜினி இணைப்பு: பின்னணியில் பிரசாந்த் கிஷோரா?

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் இறங்கி உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவரை கொன்று புதைத்த இடத்தை அடுப்பங்கரையாக மாற்றிய மனைவி!

'பாபநாசம்' என்ற படத்தில் கமல் ஒரு கொலை செய்து போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டு வரும் இடத்தில் புதைத்துவிடுவார். போலீசார் கடைசி வரை அந்த கொலையை கண்டுபிடிக்கவே முடியவில்லை