ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 300 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த பரிதாபம்… மர்மநோய் காரணமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் மர்மநோய் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. கோதாவரி மாவட்டம் எலுரு எனும் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென அடுத்தடுத்து தொடர்ந்து மயக்கி விழுந்ததால் அந்த மாநிலமே ஸ்தம்பித்து போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 46 குழந்தைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மயங்கி விழுவோரின் எண்ணிக்கை தற்போது 340 ஆக அதிகரித்து இருக்கிறது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதோடு 157 பேர் உயர் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் நோயின் தீவிரத்தால் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதனால் திடீரென மக்கள் மயங்கி விழுவதற்காகக் காரணத்தை தேடும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அந்த சோதனையின் முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கல் போன்ற கன உலோகங்களின் மாதிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த உலோகங்களின் மாதிரிகள் மனிதர்களின் ரத்தத்தில் கலந்த காரணத்தால் மயக்கம் மற்றும் உடல் நிலை பாதிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை தற்போது துவங்கப் பட்டுள்ளது.
இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆந்திர அரசு, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (AIIMS) அனுப்பி வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. எலுரு பகுதியில் அதிகளவு நெல் சாகுபடி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற தொழில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த மக்களின் உணவுகளில் ஈயம் மற்றும் நிக்கல் உலோகங்கள் கலந்து இருக்குமா என்பது குறித்த சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக பால் மற்றும் தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்து பார்த்ததில் அதில் இந்த மாதிரிகள் கலக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதனால் மற்ற உணவுப் பொருட்களின் வாயிலாக கன உலோகங்கள் மனிதர்களின் ரத்திற்கு சென்று இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஒரே நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் தற்போது மர்மநோயின் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த அரசாங்கமே கடும் பதற்றத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. மர்மநோய்க்கான காரணம் குறித்து ஆய்வு முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
A total of 340 people have fallen sick in Andhra Pradesh' West Godavari out of which 157 people are undergoing treatment. One person has died. Patients complain of epilepsy, vomiting, headache, backache, general weakness & mental tension: District Collector in a report https://t.co/esAegSBQih
— ANI (@ANI) December 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments