ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 300 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த பரிதாபம்… மர்மநோய் காரணமா???

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

 

ஆந்திர மாநிலத்தில் மர்மநோய் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. கோதாவரி மாவட்டம் எலுரு எனும் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென அடுத்தடுத்து தொடர்ந்து மயக்கி விழுந்ததால் அந்த மாநிலமே ஸ்தம்பித்து போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 46 குழந்தைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மயங்கி விழுவோரின் எண்ணிக்கை தற்போது 340 ஆக அதிகரித்து இருக்கிறது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதோடு 157 பேர் உயர் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் நோயின் தீவிரத்தால் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன.

இதனால் திடீரென மக்கள் மயங்கி விழுவதற்காகக் காரணத்தை தேடும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அந்த சோதனையின் முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கல் போன்ற கன உலோகங்களின் மாதிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த உலோகங்களின் மாதிரிகள் மனிதர்களின் ரத்தத்தில் கலந்த காரணத்தால் மயக்கம் மற்றும் உடல் நிலை பாதிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை தற்போது துவங்கப் பட்டுள்ளது.

இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆந்திர அரசு, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (AIIMS) அனுப்பி வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. எலுரு பகுதியில் அதிகளவு நெல் சாகுபடி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற தொழில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த மக்களின் உணவுகளில் ஈயம் மற்றும் நிக்கல் உலோகங்கள் கலந்து இருக்குமா என்பது குறித்த சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக பால் மற்றும் தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்து பார்த்ததில் அதில் இந்த மாதிரிகள் கலக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதனால் மற்ற உணவுப் பொருட்களின் வாயிலாக கன உலோகங்கள் மனிதர்களின் ரத்திற்கு சென்று இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஒரே நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் தற்போது மர்மநோயின் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த அரசாங்கமே கடும் பதற்றத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. மர்மநோய்க்கான காரணம் குறித்து ஆய்வு முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.  

More News

பிறந்த குழந்தைக்கு 27 வயதா??? சாதனை சம்பவத்தால் உறைந்து போன பெற்றோர்கள்!!!

அமெரிக்காவின் டெல்லிஸி மாகாணத்தில் 27 வருடங்களாக உறை பனியில் சேகரித்து வைக்கப்பட்ட கரு முட்டையில் இருந்து ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத வைல்ட்கார்ட் எண்ட்ரி? 

பிக்பாஸ் வீட்டில் தனி திறமையுடன் விளையாடிக்கொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக விமர்சனம் செய்யப்பட்டாலும்

இவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக யார்க்கர்கள் வீசி புகழ்பெற்ற நடராஜன் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத

மகள் மரணத்தில் சந்தேகம்: சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

பாலாஜியை பழிவாங்க அர்ச்சனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள்.