தண்ணீருக்குள் பிரசவம் என்பது சாத்தியமா?

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]


பாரம்பரியமான மற்றும் இயற்கையான முறைகளில் தண்ணீர் பிரசவமும் ஒன்று.இந்த மாதிரியான செயல்முறை கருப்பை சீராக இருக்க உதவுகிறது.பிரசவ வலியை சமாளிக்கவும் குழந்தையை அமைதியாக வைத்து கொள்ளவும் இந்த தண்ணீர் பிரசவம் பெருமளவில் உதவி செய்கிறது.சமீபத்தில் இந்த முறை இந்தியாவில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இது குறித்து செய்த ஆய்வில் பெண்கள் பிரசவத்திற்கு முன்பும் பின்பும் உள்ள நிலையை கண்டறிந்து உள்ளார்கள்.அதில் பெண்கள் பிரசவத்திற்கு முன்பு குறைவான வலியை உணர்ந்து உள்ளார்கள்.பிரசவத்திற்கு பிறகு அதிக வலியை அனுபவிக்கவில்லை.பிரசவத்தின்போது தாய் தண்ணீரிலே பிரசவிப்பது பாதுகாப்பான முறையாகவும் தாயின் பிரசவ வலியையும் எளிதாக்குகிறது.

சாதாரண இதய துடிப்புடன் கரு ஆரோக்கியமாக இருப்பது,சாதாரண நிலை மற்றும் அதிக ஆபத்து இல்லாத பிரசவம்,சிக்கல் இல்லாத தொற்று நோயில்லாத பிரசவமாக இருக்கிறது.வெதுவெதுப்பான நீர் பிரசவம் என்பது தாயின் உடலை இதமாக வைத்து கொள்ள உதவுகிறது.தாயின் உடலை நீருக்குள் மூழ்க வைப்பதால் உடலுக்கு அதிக நெகிழ்ச்சியயையும் கட்டுப்பாட்டையும் தருகிறது.நிதானமாக இருப்பதால் அது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் பிரசவ வலியை குறைக்கவும் வலி மருந்துகளின் தேவையை குறைக்கவும் உதவுகிறது.

நீரில் மிதக்கின்ற போது பிறப்புறுப்பு கிழிவதை தவிர்த்து மன அழுத்த ஹார்மோன் அதிகமாகாமல் பார்த்து கொள்கிறது.விரைவாக உடலை மீட்க உதவுகிறது.பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று.

அந்த வகையில் நீர் பிரசவம் நம்பகமான மற்றும் நுட்பமான ஒன்றாக உள்ளது.இருந்தாலும் இந்த நீர் பிரசவ செயல்முறை நிபுணர்களின் ஆலோசனைப்படி மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொண்டால் எந்த ஆபத்தும் இல்லாமல் பிரசவம் செயல்முறைப்படுத்தப்படும் .

பிரசவ முறையில் சில வரைமுறைகள் அல்லது வரம்புகள் உள்ளன.சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கீழ் மட்டுமே நீர் பிரசவம் பாதுகாப்பானதாக இருக்கும்.இந்த செயல் தீவிரமாக இருக்கும்.எனவே பிரசவ நேரத்தில் தீவிரமாக உழைக்க வேண்டி இருக்கும்.உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனம் ரீதியாகவும் அவர்கள் பிரசவத்திற்கு தயாராக வேண்டும்.அது ஒரு பொறுமையான அனுபவம் என்பதால் வசதியான மென்மையான அணிந்து கொள்ளலாம்.

மேலும் வழக்கமாக நடக்கும் பிரசவத்தை காட்டிலும் நீர் பிரசவம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு வசதியான நிலை மற்றும் பக்குவத்தை தருகின்றன.இது தற்போது அனைத்து பெற்றோர்களாலும் தேர்வு செய்யப்படும் முறை ஆகும்.

More News

'கோட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் புரமோ வீடியோ.. பாடகர் குறித்த மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும்  'கோட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக சில மணி நேரங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்

ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் குறித்த சர்ச்சை கருத்து.. பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!

பிரபல நடிகர் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயிலரை அடுத்து 'கங்குவா'.. அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் பிரபலங்கள்..!

அஜித் நடிக்க இருக்கும் 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்த சுனில் நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்தி வெளியான நிலையில் தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வரும் பிரபலமும்

ரூ.80 கோடி மோசடியா? 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தவு..!

சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மலையாள திரைப்படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்ளின் வங்கி கணக்கை முடக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை சம்பவம் உறுதி.. வெங்கட்பிரபுவின் அசத்தலான 'கோட்' அப்டேட் !

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.