ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவராகிய ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான '100% காதல்', 'ஐங்கரன்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'வாட்ச்மேன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோ பாடல் ஒன்று வரும் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிரபல கன்னட நடிகையும், கன்னட பிக்பாஸ் 5ஆம் பாகத்தில் கலந்து கொண்டவருமான சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்து வருகிறார்.