சிறுத்தைக்கும் ராட்சத பல்லிக்கும் நடக்கும் சண்டை..! வைரல் வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சாம்பியாவின் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ஒரு ராட்சச பல்லி தன்னைவிட வலிமை மிகுந்த சிறுத்தையுடன் தன் உயிரைத் தற்காத்துக்கொள்ளப் போராடுகிறது.
2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த விடியோவை, தற்போது இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீர் வாழ் உயிரினமான அந்த பல்லி, தன்னைத் தாக்க வரும் சிறுத்தையை தனது வாலால் பலமுறை பாலமாக அடிக்கிறது.
இருப்பினும் வேட்டையாடி உண்பதில் தலைசிறந்த விலங்கான சிறுத்தை இறுதியில் வென்று, அதற்கான பரிசை எடுத்துச்சென்றது. எர்த் டச் என்ற செய்தி நிறுவனம் கூறுகையில், இந்த சண்டை நடந்த இடத்தின் அருகில் நீர்நிலைகள் ஏதும் இருந்திருந்தால் அந்த பல்லி எளிதில் தப்பியிருக்கும். ஆனால் தன்னைச் சுற்றி நீர் நிலைகள் இல்லை என்பதை உணர்ந்ததாலேயே அந்த பல்லி போராடி தோல்வி அடைந்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இந்த விடியோவை பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்ககுள் இந்த வீடியோவை 2000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் இறுதி வரை போராடிய அந்த பல்லி மிகவும் தைரியமான விலங்கு என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com