ஆஸ்திரேலியாவை அலற வைத்த ஒரு கேட்ச்… வைரல் வீடியோ!!!
- IndiaGlitz, [Friday,December 18 2020] Sports News
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளை முடித்துக் கொண்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதை ஈடுகட்டும் விதமாக டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியுடன் வெற்றிப் பெற்றது.
அதைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அந்நாட்டின் அடிலெய்டு நகர ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை நிதானமாக எதிர்க்கொண்ட இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. இதில் விராட் கோலி 74 ரன்களை எடுத்து அவுட்டானார்.
இந்நிலையில் 2 ஆவது நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்க்கொண்ட ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் எடுத்திருந்த போதே 4 விக்கெட்டுகளை இழக்க வேண்டிவந்தது. ஆஸ்திரேலிய அணியின் 6 ஆவது விரராக களம் இறங்கிய கேமரூன் கீரின் விக்கெட்டை ரவிசந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க கேமரூன் முயன்றார். அந்த பந்தை பாய்ந்து பிடித்து விராட் கோலி மாஸ் காட்டினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 62 ரன்களுடன் முன்னிலை பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Cameron Green's debut innings was stopped short by an absolute classic from Virat Kohli - and the Indian captain enjoyed it a lot! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/krXXaZI1at
— cricket.com.au (@cricketcomau) December 18, 2020