ஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்போது இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டிக்கு நடுவே இந்திய இளம் வீராங்கனை ஹர்லின் தியோல் செய்த காரியம் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது பல மூத்த வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் நடைபெற்ற 2 டெஸ்ட்போட்டி கொண்ட தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒருபோட்டியை நழுவ விட்ட நிலையில் ஒரு போட்டியை டிரா செய்து இருக்கிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து நேற்றைய முதல் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனால் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்களை குவித்து இருந்தது. இந்தப் போட்டிக்கு நடுவே 18 ஆவது ஓவரில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே பந்துவீச இங்கிலாந்தின் எமி ஜோன்ஸ் பேட்டிங் செய்து கொணடு இருந்தார். அப்போது பந்து பவுண்டரி லைனை தாண்டி சிக்ஸருக்கு பாய்ந்தது. இந்நிலையில் பவுண்டரி லைனில் இருந்த இந்திய இளம் வீராங்கனை ஹர்லின் தியோல் அந்தப் பந்தை அசாத்தியமாக கேட்ச் பிடித்தார்.
அவர் கேட்ச் பிடித்த இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. மேலும் ஹர்லின் தியோலின் ஃபீல்டிங் திறமையைக் கண்டு பல மூத்த வீரர்களும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சச்சின் அவர்கள், “இந்த ஆண்டின் சிறந்த கேட்ச் என்று பாராட்டியுள்ளார். மேலும் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணனும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
3 போட்டிக்கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்த நிலையில் இந்திய அணி 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 54 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. மேலும் போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி முதல்போட்டியிலேயே தோல்வியை சந்தித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா தோல்வியை சந்தித்து இருந்தாலும் தற்போது ஹர்லின் தியோலின் அசாத்திய கேட்ச் அனைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது. இதனால் கேட்ச் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
A fantastic piece of fielding ??
— England Cricket (@englandcricket) July 9, 2021
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments