பார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பையின் குடியிருப்பு பகுதியில் நின்று இருந்த கார் ஒன்று நேற்று காலை திடீரென தோன்றிய பள்ளத்தில் புதைந்து மாயமானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சாலைகளில் அவ்வபோது திடீர் பள்ளங்கள் தோன்றி வாகனங்கள் அதில் புதைவது உண்டு. ஆனால் மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் இருக்கும் ராம்ஜிநிவாஸ் குடியிருப்புக்கு அருகே நின்றிருந்த ஒரு கார் திடீரென தோன்றிய தண்ணீர் பள்ளத்தில் புதைந்து போனது. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தார் சாலையில் இருந்த கார் திடீரென முன்பக்கமாக சாய்கிறது. இப்படி சாய்ந்த கார் சில வினாடிகளில் தண்ணீருக்குள் மூழ்குகிறது.
இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள், சாலையில் பள்ளம் தோன்றிவிட்டதாகக் கருதி காமாலேன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விட்டனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த கார் திடீரென தண்ணீர் பள்ளத்தில் மூழ்கியது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் ராம்ஜிநிவாஸ் குடியிருப்புக்கு அருகே ஒரு கிணறு இருந்ததாகவும் அந்த கிணற்றின் ஒருபகுதி கான்கீரிட் சுவர்களால் மூடப்பட்டு இருந்ததாகவும் தற்போது மும்பையில் கனமழை பெய்துவருவதால் கிணற்றின் மேல் இருந்த கான்கீரிட் சுவர் உடைந்து திடீர் தண்ணீர் பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது எனவும் போலீசார் கூறியுள்ளனர். இந்தப் பளத்தில் பங்கஸ் மேத்தா என்பவரின் புது கார் மூழ்கி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Scary visuals from Mumbai's Ghatkoper area where a car drowned in few seconds. pic.twitter.com/BFlqcaKQBo
— Shivangi Thakur (@thakur_shivangi) June 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments