ரிஷப் பந்த்-னா எனக்கு பயம்… மனம் திறக்கும் இங்கிலாந்து வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன் விதிதியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் இந்த 5 நாள் விளையாட்டில் பல்வேறு திருப்பங்களும் தடலாடி மாற்றங்களும் நடைபெற்றன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது வித்தியாசமான அனுபவங்களை தற்போது பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த்–னா எனக்கு அவ்வளவு பயம். இவருக்கு பந்து வீசியதால் இனி நான் கிரிக்கெட் விளையாட முடியுமா? என்ற சந்தேகமே வந்து விட்டது என மனம் திறந்து இருக்கிறார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாக் லீச். காரணம் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. இதற்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணி தொடர்ந்து 4 விக்கெட்டுகளை இழந்து படு மோசமான நிலையில் இருந்தது.
இந்நிலையில் 73/4 என்று இருந்தபோது களம் இறங்கினார் ரிஷப் பந்த். அவர் கிரிக்கெட் கிரவுண்டிற்கு வந்ததில் இருந்தே தன்னுடைய அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு இடது கைப் பழக்கம் கொண்ட ஜாக் லீச் பந்து வீசினார். ஆனால் இடது, வலது என்றெல்லாம் பாரப்பட்சம் காட்டாத ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 2 பவுண்டரி என்று படு வேகத்தில் மிரட்டச் செய்தார். ஜாக் லீச்சின் 8 ஓவர் பந்துக்கு ரிஷப் பந்த் 77 ரன்களை குவித்து ரசிகர்களையே அசர வைத்தார்.
இந்த ஆட்டத்தைப் பார்த்து வியந்து போன ஜாக் லீச், தற்போது ரிஷப் பந்து குறித்து ஆச்சர்யமான தகவல்களை பதிவு செய்து உள்ளார். ரிஷப் பந்த்-னா எனக்கு பயம். 8 ஓவர்களுக்கு கிட்டத்தட்ட 80 ரன்களை கொடுத்து விட்டேன். இதனால் இனி கிரிக்கெட் விளையாட முடியுமா? என்ற சந்தேகமும் எனக்கு வந்து விட்டது. ஆனால் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தி நான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தேன்.
கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற உணர்வுகள் வருவது இயல்புதான். அனைத்தையும் தாண்டியே கிரிக்கெட் விளையாட்டை ரசிக்கிறோம் என்று மனம் திறந்து இருக்கிறார் ஜாக் லீச். இவரது பதிவு ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments