ருதுராஜ் கெயிக்வாட்க்கு வாய்ப்புக் கொடுக்காதீங்க… திடுக்கிட வைத்த முன்னாள் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னணி பேட்ஸ்மேனான ருதுராஜ் கெயிக்வாட் தனது வாய்ப்புக்காக தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கிறார். இப்படியிருக்கும்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுக்காதீங்க எனக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் முதல் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து 3 ஆவது போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் பயோபபுள் முறையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களது சொந்த காரணங்களாக வெளியேறி இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்திய அணியில் மீண்டும் பிளேயிங் 11 பற்றிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து நல்ல ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கெயிக்வாட் மீது பலரது கண்கள் மொய்க்க ஆரம்பித்து இருக்கின்றன. ஆனால் ருதுராஜ் கெயிக்வாட்டை எடுக்க வேண்டாம் என்றும் ஒரு போட்டிக்காக அவரைத் தேர்வு செய்யும்போது அழுத்தம் அதிகமாகும் என்றும் அவர் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கட்டும் என்றும் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இந்தக் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்க துவங்கியுள்ளனர்.
முன்னதாக நியூசிலாந்து போட்டிகளின்போது கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் இருவரும் ஓப்பனராக செயல்பட்டனர். அடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் தவான் இருவரும் ஓப்பனராக இருந்தனர். தொடர்ந்து மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு இஷான் கிஷனும் ரோஹித்தும் ஓப்பனராக இருந்துவரும் நிலையில் ருதுராஜ் கெயிக்வாட்டை எப்படி ஓப்பனராக இறக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து ஒரு போட்டிக்காக ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் அது அவருடைய பேட்டிங் ஸ்டைலேயே மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் ஓப்பனராக இறங்கும் வாய்ப்பு கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
மேலும் பயிற்சியாளர் டிராவிட்டும் இதே கருத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவர் ரோகித்தையும் இஷான் கிஷனையும் ஓப்பனராக இறக்கிவிட்டு முதல் விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயரை இறக்கிவிடலாம் என்ற முடிவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments