ரஜினி பாடல் பாடி நடராஜனை வாழ்த்திய வாஷிங்டன் சுந்தர்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றாலும் ஐபிஎல் போட்டியின் ஹீரோவாக அனைவராலும் கருதப்பட்டவர் யார்க்கர் மன்னன் நடராஜன் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஐதராபாத் அணியை சேர்ந்த நடராஜன் போட்ட ஒவ்வொருவரும் யார்க்கரும் சர்வதேச தரத்தில் இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்தது என்பதும் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தமிழ் இளைஞருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்ததை தமிழ்நாடே கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடராஜனின் சக தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’படையப்பா’ திரைபடத்தின் பாடலை பாடி நடராஜனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.