தங்கக்கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வரிடம் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தாரா??? என்ஐஏவின் அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவையே புரட்டிப்போடும் விதமாக கடந்த மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் முறைகேடான வகையில் 30 கிலோ தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த குற்றச்சாட்டில் முக்கிய நபராக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷின் நண்பர்கள் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உள்ளிட்ட 12 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவர்களின்மீது அமலாக்கத் துறையும் பல வழக்குகளைத் தற்போது பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில் தங்கக்கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் நேற்று கொச்சியிலுள்ள தேசியப் புலனாய்வு நீதிமன்றத்தில் 32 பக்கம் அடங்கிய ஆவணம் ஒன்றை தாக்கல் செய்தனர். அப்போது ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். இதனால்தான் தூதர பார்சலைப் பெறுவதற்கு ஐஏஎஸ் அதிகாரி எம் . சிவசங்கர் வீட்டுக்கு ஸ்வப்னா சுரேஷ் சென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும் “ஸ்வப்னா சுரேஷை முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றாகத் தெரியும். முதல்வரிடமிருந்து பல்வேறு யோசனைகளைப் பெற்றுள்ளார் ஸ்வப்னா. அதைப்போலவே ஸ்வப்னாவுக்கு முதல்வர் உதவியுள்ளார். முதல்வர் அலுவலகத்தைப் போலவே ஐக்கிய அரபு அமீரக அலுவலகத்திலும் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார். தூதர பார்சலை விடுவிக்குமாறு சுங்கத்துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தூதரகத்துக்கு அவர் மெயில் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் முதன்மை செயலர் சிவசங்கர் வீட்டுக்குச் சென்று அவரது உதவியை நாடியுள்ளார்.
அதைப்போலவே வெளிநாடுகளிலும் அவருக்கு அதிக தொடர்பு இருந்துள்ளது. அரபிகளிடமிருந்து அவர் ஒவ்வொரு பார்சலுக்கும் 1,000 அமெரிக்க டாலர்களை கமிஷனாக பெற்றுள்ளார். இந்த சதியில் முக்கிய நபராக ஸ்வப்னா உள்ளார். அதாவது இந்த சதியின் ஆல்-இன்-ஆல் ஆக அவர் இருந்துள்ளார்” என தேசியப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments