பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாத வண்ணம் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டு இருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய் மற்றும் 19 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. கடலூரில் அதிகப்பட்சமாக 90 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் தற்போது 28 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 88 ரூபாய் 44 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டு இருக்கிறது என்றும் இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஒருவேளை பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் அது எத்தனாலுடன் கலந்து டேங்கின் அடிப்பகுதியில் தங்கும் என்றும் இதனால் வண்டி ஸ்டாட் ஆகாமல் போகும் சிக்கல் உண்டாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

More News

சூர்யா 40: 12 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் 'சூர்யா 40' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு

ஓய்வுக்கு பின் 'தல' தோனி செய்யும் வேலையை பாருங்கள்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் மாறி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது: கமல்ஹாசன்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியா முழுவதும் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ரூ.90க்கு மேலும், வட மாநிலங்களில் ரூ.100ஐயும் தாண்டி

காதல் மனைவியிடம் கிஃப்ட் கேட்ட முன்னணி நடிகர்? வைரலாகும் புகைப்படம்!

ரீலில் நடித்து ரியல் ஜோடியாக மாறிய ஆர்யா-சாயிஷா தற்போது நட்சத்திரத் தம்பதிகளாக உலா வருகின்றனர்.

பிக்பாஸ் சுஜாவின் காதலர் தின ரொமான்ஸ் புகைப்படம் வைரல்!

நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளும், காதலர்களும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.