பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுற்றுச் சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாத வண்ணம் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டு இருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய் மற்றும் 19 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. கடலூரில் அதிகப்பட்சமாக 90 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் தற்போது 28 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 88 ரூபாய் 44 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டு இருக்கிறது என்றும் இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஒருவேளை பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் அது எத்தனாலுடன் கலந்து டேங்கின் அடிப்பகுதியில் தங்கும் என்றும் இதனால் வண்டி ஸ்டாட் ஆகாமல் போகும் சிக்கல் உண்டாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout