இந்த லிங்கை மட்டும் கிளிக் செய்யாதீங்க… பொதுமக்களை எச்சரிக்கும் சென்னை காவல்துறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவா ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகிறோம். இந்த வாட்ஸ் ஆப் செயலி பச்சை நிறத்தில் இருக்கும். இந்த வாட்ஸ் செயலியை பிங்க் நிறத்தில் மாற்றி புதிய அப்டேட்டுகளுடன் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லி தற்போது போலி வாட்ஸ் ஆப் செயலியின் லிங்க் ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வருகிறது.
PinkwhatsApp எனப்படும் இந்த செயலியை தப்பித் தவிறி தொட்டு விட்டாலே போதுமானது. உடனே அந்த செயலி தன்னால் பதிவிறக்கம் செய்து கொண்டு செல்போனில் இருக்கும் டேட்டாக்களை உறிஞ்சத் தொடங்கிவிடும். மேலும் பயனாளர்களின் தரவுகளையும் இதன்மூலம் சைபர் ஹேக்கர்கள் திருட வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த எச்சரிக்கையைத்தான் சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து சென்னை போலீஸ் தெரிவித்துள்ள அறிக்கையில் பிங்க் வாட்ஸ் ஆப் எனும் பெயரில் தற்போது போலி லிங்க் ஒன்று செல்போன்களில் உலா வருகிறது. இதனால் PinkwhatsApp அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ உலவும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் குறித்த எந்த லிங்கையும் வாடிக்கையாளர்கள் க்ளிக் செய்ய வேண்டாம். மேலும் பிக்ங் நிறத்தில் வரும் வாட்ஸ் ஆப் இமேஸ் குறித்தும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவும்.
ஒருவேளை இந்த லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்யும்போது சைபர் திருடர்கள் உங்கள் செல்போனில் உள்ள டேட்டாக்களை திருடவோ அல்லது செல்போனில் இருக்கும் தரவுகளைத் திருடவோ வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்து உள்ளது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆப்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments