தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை காலி… பீதியை கிளப்பும் பிரபல நிறுவனம்!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனம் ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் வேலைப்புரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை செலுத்தாமல் இருக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு உருமாற்றங்களை அடைந்து டெல்டா, ஒமைக்ரான் வடிவில் மேலும் தீவிரம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தீர்வாக தடுப்பூசி மட்டுமே நம்பப்படும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் சில நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் பொது இடங்களில் நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்னும் சில நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவை தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதித்து வருகிறது. இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனம் இரண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்து வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒமைக்ரான் பீதிக்கு இடையே தென்ஆப்பிரிக்காவில் மர்மநோய் பாதிப்பு…  WHO கவலை!

கொரோனா வைரஸின் புதிய உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதன்முதலில் தென்ஆப்பிரிக்காவின்

அவரைப் போலவே விமானி ஆவேன்… விபத்தில் இறந்த வீரரின் 12 வயது மகள் உருக்கம்!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே கடந்த 8 ஆம் தேதி விபத்துக்குள்ளானது.

பேஷனில் இது புதுசு… மேலாடைக்குப் பதிலா மெஹந்தி போட்டு அலறவிட்ட இளம்பெண்!

பெண்கள் அணியும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்து பார்த்திருப்போம்,

அவனுக்கு வாழ்க்கையில வேலையே இல்லையா? மீண்டும் ஆவேசமாகும் அக்சரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 2 புரோமோ வீடியோவிலும் அக்சரா ஆவேசமடைந்து பிரியங்கா மற்றும் ராஜுவிடம் வாக்குவாதம் செய்த நிலையில் மூன்றாவது புரோமோ வீடியோவிலும் அவர்தான்

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பித்த ஒரே வீரரும் காலமானார்: சோகத்தில் இந்திய மக்கள்!

சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பிய விமானப்படை கேப்டன் வருணசிங் அவர்கள் சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.