முதல்முறையாக டபுள் ஆக்சனில் தனுஷ் பாடலுக்கு நடனமாடும் வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி, ’ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ஒட்டகத்தை கட்டிக்கோ, பிரபுதேவா நடித்த ’காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’முக்காலா முக்காபுலா’ முதல் ’ஹவுஸ்புல் 4’ என்ற படத்தில் இடம்பெற்ற ’பாலா பாலா’ மற்றும் சமீபத்தில் வெளியான மகேஷ்பாபு படத்தின் பாடல்கள் வரை வார்னர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடனமாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது முதல்முறையாக டபுள் ஆக்சன் வீடியோவை முயற்சித்துள்ளார் வார்னர். தனுஷ் நடித்த ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘வொய் திஸ் கொலைவெறி’ பாடலுக்கு வார்னர் டபுள் ஆக்சனில் தோன்றும் வீடியோவும், அதை எடிட் செய்த விதமும் மிகவும் அருமையாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இதேபோன்று இன்னும் பல வீடியோக்களை வார்னர் வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தங்கள் விருப்பத்துக்குரிய ஹீரோக்களின் பெயரை குறிப்பிட்டு அவரது பாடலுக்கும் நடனமாடுங்கள் என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பைக்கை திருடி சொந்த ஊருக்கு சென்றவுடன் பைக்கை கொரியரில் அனுப்பிய நபர்

கோவையில் உள்ள ஒரு நபர் பைக்கை திருடி, தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்ற பின், பைக்கை அதன் உரிமையாளருக்கு கொரியரில் அனுப்பி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

கொரோனா நேரத்தில் தலைத்தூக்கும் போபால் அணுவுலை வெடிப்பு விவகாரம்!!!

போபால் தலைநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அணுவுலை வெடிப்பினால் அந்நகரம் முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு

கொரோனா வைரஸ் ஆற்றல் இழந்து வருகிறது!!! மகிழ்ச்சித் தெரிவித்த இத்தாலி விஞ்ஞானிகள்!!!

இத்தாலி, கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும் தற்போது கொரோனா உயிரிழப்புகள் அந்நாட்டில் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.