பந்தை சேதப்படுத்திய விவகாரம்: மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட வார்னர்

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கேமிரா மூலம் உலகிற்கு அம்பலமானது. இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர்களுக்கும் பங்கு உண்டு என்பது தெரியவந்ததால் இருவரின் பதவிகள் பறிக்கப்பட்டு ஒரு ஆண்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் 2018 போட்டியில் விளையாடும் வாய்ப்பும் பறிபோனது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து சிட்னி திரும்பும் வழியில் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார் வார்னர். ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவெனில் தற்போது  நான் சிட்னிக்கு திரும்பி சென்று கொண்டிருக்கின்றேன்..  கிரிக்கெட் விளையாட்டின் பெயரை கெடுக்கும் வகையில் தவறுகள் நடந்து விட்டன. எனது செயலுக்கு நான் முழு பொறுப்பேற்று அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.  

விளையாட்டை நாம் அனைவரும் நேசிக்கிறோம். சின்ன வயதில் இருந்தே நான் கிரிக்கெட் விளையாடை நேசித்தேன். 

இந்த இக்கட்டான நிலையில் என் குடும்பத்தினருடனும்,  நண்பர்களுடனும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களுடனும் நேரத்தை செலவிட விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்

More News

ஒரே நேரத்தில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இளம் நடிகை

'பிரேமம்' படம் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தின் வெற்றியால் தனது டாக்டர் தொழிலை கூட கைவிட்டு முழுநேர நடிகையாகிவிட்டார்.

வேலைநிறுத்தம் எப்போது முடியும்? விஷால் விளக்கம்

தமிழ் திரையுலகில் வரலாறு காணாத வகையில் ஒரு மாதம் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுத்தம் வரை

பூமராங் படத்திற்காக அதர்வா எடுத்த வித்தியாசமான முயற்சி

ஆர்.கண்ணன் மற்றும் அதர்வா இணைந்து உருவாக்கியுள்ள 'பூமராங்' திரைப்படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

'நரகாசுரன்' படத்தில் இருந்து விலக தயார்! கவுதம் மேனனின் அதிரடி அறிக்கை

கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்', செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தாமதத்திற்கு இயக்குனர் கவுதம் மேனனே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதம் ஏன்? கவுதம் மேனன் மீது புகார்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது.