பந்தை சேதப்படுத்திய விவகாரம்: மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட வார்னர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கேமிரா மூலம் உலகிற்கு அம்பலமானது. இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர்களுக்கும் பங்கு உண்டு என்பது தெரியவந்ததால் இருவரின் பதவிகள் பறிக்கப்பட்டு ஒரு ஆண்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் 2018 போட்டியில் விளையாடும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து சிட்னி திரும்பும் வழியில் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார் வார்னர். ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவெனில் தற்போது நான் சிட்னிக்கு திரும்பி சென்று கொண்டிருக்கின்றேன்.. கிரிக்கெட் விளையாட்டின் பெயரை கெடுக்கும் வகையில் தவறுகள் நடந்து விட்டன. எனது செயலுக்கு நான் முழு பொறுப்பேற்று அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.
விளையாட்டை நாம் அனைவரும் நேசிக்கிறோம். சின்ன வயதில் இருந்தே நான் கிரிக்கெட் விளையாடை நேசித்தேன்.
இந்த இக்கட்டான நிலையில் என் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களுடனும் நேரத்தை செலவிட விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout