கார்த்தியின் 'சுல்தான்' பட வியாபாரம் குறித்த அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ‘சுல்தான்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து கார்த்தி ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படம் கார்த்தியின் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘சுல்தான்’ படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உரிமைகளை வாராங்கல் ஸ்ரீனு என்பவர் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளார். இது குறித்த தகவலை ‘சுல்தான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோல் தமிழக ரிலீஸ் உரிமையை குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.