காமிக் புத்தக வடிவில் வெளியான சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

கோலிவுட் திரையுலகில் இன்று மாஸ் நடிகர்களில் ஒருவராகவும், மாஸ் ஓப்பனிங் வசூல் தரும் நடிகராகவும் உருவாகியுள்ளவர் சிவகார்த்திகேயன். இவருடைய சூப்பர் ஹிட் வெற்றி என்பது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இருந்து தொடங்கியது என்று கூறினால் அது மிகையில்லை. அதனால் தான் அந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்த்ல் 'ரஜினிமுருகன்' , 'சீமராஜா' என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் தற்போது காமிக் புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. இந்த புத்தக வெளியிட்டு விழாவில் சிவகார்த்திகேயன், சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன் படங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்து வரும் நிலையில் குழந்தைகள் விரும்பும் காமிக் புத்தக வடிவில் இந்த படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.