டெல்லி கலவரம்.. என்ன ஆறுதல் சொல்வீர்கள்..?! இணையத்தை உலுக்கும் புகைப்படம்..!
- IndiaGlitz, [Friday,February 28 2020]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம் மக்களை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் கடந்த மூன்று நாட்களாக நடத்திய கொடூர வன்முறை வெறியாட்டத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கலவரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் கலவரத்தின் கோரத்தினை காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கலவரத்தில் தந்தையை இழந்த மகன் தன் தந்தையின் சடலத்தின் முன் அழும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மனதை உலுக்கும் அந்த புகைப்படமானது ஒரு கலவரம் நடந்தால் அது எத்தகைய பாதிப்புகளை சாதாராண மக்களுக்கு ஏற்படுத்தட்டும் என காட்டுவதாக உள்ளது.
கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குருதேஜ்பகதூர் மருத்துவமனையில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை இராணுவப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காயம்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.