VSOP நடிகைக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி திடீர் திருமணம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த 'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை பானு, அதன் பின்னர் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா போன்ற பல படங்களில் நடித்தார். மேலும் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' என்ற படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பானுவுக்கும் பிரபல மலையாள பின்னணி பாடகி ரிமி டோமி அவர்களின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் வரும் 23ஆம் தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. மேலும் வரும் 30ஆம் தேதி திருமணம் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இது ஒரு காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது பானு, பாபிசிம்ஹாவின் பாம்புச்சட்டை மற்றும் சகுந்தலாவின் காதலன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பு தொடரும் என்று பானு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments