close
Choose your channels

நடுக்கடலில் பேனர் கட்டிய சிம்பு ரசிகர்கள்: வேற லெவலில் VRV புரமோஷன்!

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றிரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகியது.

இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் இப்போதே 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கான பேனர்கள், கட் அவுட்டுக்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் இந்த படத்தின் புரமோஷன் வேற லெவலில் இருக்க வேண்டும் என்று சிம்பு சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளதால் அஜித் ரசிகர்களுக்கு இணையான புரமோஷன் செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியானபோது அவரது ரசிகர்கள் புதுவை அருகே நடுக்கடலில் படகில் சென்று பேனர் வைத்தனர் என்று செய்திகள் வெளியானது. அதைபோலவே தற்போது சிம்பு ரசிகர்களும் அதே இடத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment