கொரோனா பாதித்த நுரையீரல் எப்படி இருக்கும் தெரியுமா..? 3டி வீடியோ வெளியிட்ட மருத்துவர்கள்.

  • IndiaGlitz, [Friday,March 27 2020]

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவரின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என காண்பதற்காக மருத்துவர்கள் முப்பரிமாண விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது தற்போது உலகம் முழுக்க 180 நாடுகளில் பரவியுள்ளது. 5,52,599 பேர் இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,28,706 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் இந்த வைரஸிற்கான எதிர்ப்பு மருந்தினை கண்டறிய தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரலை ஸ்கேன் செய்து முப்பரிமாண வீடியோ ஒன்றை வாஷிங்டன் டிசியை சேர்ந்த மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் கொரோனா பாதித்த நுரையீரலை பற்றி ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர் கீத் மோர்ட்டன் விளக்குகிறார்.

வீடியோவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதிகள் வீக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரலின் மற்ற பகுதிகள் இதே போல் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மூச்சு விட சிரமப்படுவதாகவும், அவர் தெரிவிக்கின்றார். மேலும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரல் நல்ல நிலைமைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும். எனவே கவனமாக இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

More News

கிரெடிட் கார்டுகளுக்கும் இ.எம்.ஐ கட்ட வேண்டாம்: ரிசர்வ் வங்கி விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது வங்கிகளில் கடன் பெற்றவர்களின் பாரத்தைக் குறைக்கும் வகையில் மூன்று மாதத்திற்கு மாதாந்திரக் தவணைகள் கட்ட வேண்டியதில்லை

கொரோனா: வதந்தியை நம்பி ஆல்கஹால் குடித்த 300 பேர் பரிதாப பலி

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என்று கிளம்பிய வதந்தியின் காரணமாக கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட செலவுக்கே திண்டாடி வருகின்றனர்.

பிரிட்டன் இளவரசரை அடுத்து பிரதமருக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை பணக்காரர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்தவித பேதமும் இன்றி சாதாரண குடிமகன் முதல் விவிஐபி வரை அனைவரையும் தாக்கி வருகிறது.

10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

பொதுவாக கொரோனா வைரஸ் வயதானவர்களை தாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்