அடுத்த கட்டத்திற்கு சென்றது விபிஎப் பிரச்சனை: புதிய ஒப்பந்தம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே இருந்த வந்த விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது என்பதும், நவம்பர் மாதம் முழுவதும் விபிஎப் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக கியூப் அறிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நவம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது அடுத்தகட்டமாக மேலும் ஒரு தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம், க்யூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் விபிஎப் கட்டணம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே விபிஎப் கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை "நடந்து வந்தது. அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, க்யூப் நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31/3/2021 தேதிக்குள், இந்த விபிஎப் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், பதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர். 31/38/2021. தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தில் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.
தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We reached an agreement with @qubecinema and TN Theatres and Multiplex association to allow Tamil movies release till March 31st 2021. It's movie time at Theatres ?????? pic.twitter.com/7elffLRwi5
— TFAPATN (@tfapatn) November 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments