வெங்கட் பிரபு கேங்ஸ் உடன் மோதும் நாக சைதன்யா.. 'கஸ்டடி' படத்தின் 4 நிமிட புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவான ‘கஸ்டடி’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் ’சென்னை 28’ பட நடிகர்கள் நாக சைதன்யாவுடன் மோதும் 4 நிமிட ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சென்னை 28’ படத்தில் நடித்த நட்சத்திரங்களான பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, உள்ளிட்டோர் ‘கஸ்டடி’ நாயகன் நாக சைதன்யாவை சந்திப்பது போன்றும் இரு தரப்பிற்கும் இடையே நடைபெறும் வாக்குவாதம் கடைசியில் நட்புடன் முடிவது போலவும் ஒரு வீடியோவை ‘கஸ்டடி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராதிகா, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி, பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது