இந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று மும்பை என்பதால் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்க்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரும் இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்
மேலும் இன்றைய தேர்தல் தனது குடும்பத்தை பொருத்தவரை ஒரு ஸ்பெஷல் தேர்தல் என்றும் ஏனெனில் தனது மகன் அர்ஜூன் மற்றும் மகள் சாரா ஆகியோர் முதல்முறையாக வாக்களித்துள்ளனர் என்றும் பெருமையுடன் சச்சின் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சின், அஞ்சலி, சாரா, அர்ஜூன் ஆகிய நால்வரும் வாக்களித்த பின்னர் கைவிரலை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மகள் சாராவுக்கு 21 வயதும், மகன் அர்ஜூனுக்கு 19 வயதும் ஆகியுள்ளதால் இருவரும் முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Voting this year has been so much more special with Sara and Arjun voting for the first time.
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2019
I urge you all to go out and VOTE too!#LokSabhaElections#GotInked@ECISVEEP pic.twitter.com/stUpabsZsg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments