ஊரடங்கு நேரத்தில் 40 நாட்களாக குகைக்குள் முடங்கி கிடந்த மனிதர்கள்… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

பிரான்ஸ் நாட்டில் ஒரு விஞ்ஞானிகள் குழு மின்சாரம், மொபைல் போன் என எந்த வசதியும் இல்லாத ஒரு மலை குகைக்குள் 40 நாட்களாக முடங்கி உள்ளனர். 7 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் அடங்கிய இந்தக் குழுவில் விஞ்ஞானிகள், செவிலியர், உளவியலாளர், கணக்கர் எனப் பலரும் இருப்பது கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகமே இன்றைக்கு நாகரிகத்தின் உச்சத்தில் இருந்து வருகிறது. இப்படி இல்லாமல் வெறும் சூரிய ஒளியை மட்டுமே கொண்டு வாழக்கூடிய குகை வாழ்க்கையில் மனித எப்படி இயங்குகிறான்? அவனுடைய மூளை நேரத்தை எப்படி கணிக்கும்? அறியப்படாத ஒரு சூழலில் மனிதனால் வாழ முடியுமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டு பிரான்ஸ் விஞ்ஞானிகள் தற்போது 40 நாட்களாக மலைக் குகைக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள லாம்ப்ரைவ்ஸ் அரியேஜில் எனும் மலையில் விஞ்ஞானிகள் குழு தங்கி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் குழு பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததாம். ஆனால் கொரோனா நேரத்தில் இது மிகவும் எளிதாக மாறியது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா நேரத்தில் இயல்பான சூழலை விட்டுவிட்டு பலரும் பல விசித்திரமான சூழல்களில் மாட்டிக் கொண்டு இருக்கும்போது இந்த விஞ்ஞானிகள் குழு குகைக்குள் இருப்பது கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.