நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.
- IndiaGlitz, [Monday,December 09 2019]
நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஒயிட் தீவின் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். மீட்பு பணிகளை மேற்கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவிக்கின்றனர்.
ஒயிட் தீவு வகாரி என்றும் அழைக்கப்படும், இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த தீவு மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கியது. பலர் இங்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வர்.உள்ளூர் நேரப்படி சரியாக காலை 02.11 மணியளவில் எரிமலை வெடித்தது.காலை சுற்றலா பயணத்தை முடித்துவிட்டு படகில் சென்றுகொண்டிருந்தபோது, எரிமலை வெடித்து புகை மூட்டமாக காட்சியளிக்கும் எரிமலையை சுற்றுலா பயணி மைகேல் சண்டே என்பவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
ஒயிட் தீவை சுற்றி நியூசிலாந்து மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல சுற்றுலா பயணிகள் இருந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.காவல்துறையினர் மீட்பு பணிக்காக தனி குழுவை அமைத்து செயல்படுகின்றனர், ஆனால் கற்கள் மற்றும் எரிமலை துகள்கள் வெடித்து சிதறுவதால், அங்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.
இந்த கட்டத்தில், தீவிற்குள் சென்று மீட்பு பணி மேற்கொள்வது போலீசாருக்கு மிகவும் ஆபத்தான பணியாக உள்ளது என காவல்துறை அதிகாரி ஜான் டிம்ஸ் கூறுகிறார். மீட்பு பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள நிபுணர்களிடம் அறிவுரை கேட்டு செயல்படுகிறோம் என்றும் ஜான் டிம்ஸ் தெரிவித்தார்.ஆரம்ப கட்டத்தில் தீவை சுற்றி 100 பேர் இருந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர், பிறகு 50 பேர் என எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.
பயனாளர்களில் சிலர் ராயல் கரீபியனுக்குச் சொந்தமான ஓவன்ஷன் ஆஃப் தி சீஸ் என்ற கப்பல் மூலம் பயணித்து ஒயிட் தீக்கு வந்தவர்கள் என்று கருதுகின்றனர்.
My god, White Island volcano in New Zealand erupted today for first time since 2001. My family and I had gotten off it 20 minutes before, were waiting at our boat about to leave when we saw it. Boat ride home tending to people our boat rescued was indescribable. #whiteisland pic.twitter.com/QJwWi12Tvt
— Michael Schade (@sch) December 9, 2019
— Michael Schade (@sch) December 9, 2019