close
Choose your channels

ஆட்டோ ஓட்டுனரின் மகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி

Saturday, December 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம், ஒரு ரசிகர் மன்றமாக மட்டுமின்றி அவ்வப்பொது சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் செய்த நிவாரண பணிகள் மறக்க முடியாதது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் எலும்பு முறிவு நோயால் அவதிப்பட்டு ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஒருவர் கஷ்டப்படுவதாகவும், அவர் சிகிச்சைக்கு பணமின்றி வருந்துவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அறிந்ததும், அந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் வீட்டிற்கு சென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது இயக்கத்தின் சார்பில் ரூ.25,000 சிகிச்சைக்காக வழங்கினர். ஆட்டோ ஓட்டுனரும் அவரது மகளும் விஜய்க்கும் அவரது இயக்கத்தினர்களுக்கும் நன்றி கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment